கடவுச்சொல்

பின்னூட்டமொன்றை இடுக

அலிபாபா குகைக்குள் நாம்.
கடவுச்சொல் மறந்துவிட்டது
தொடர்ந்து வார்த்தைகளை
துப்பிக்கொண்டிருக்கிறது மனம்.
ஏதோ ஒரு சூட்சம நொடியில்
கடவுச்சொல் விழுந்துவிடுமென.

Advertisements

உறைபனி

4 பின்னூட்டங்கள்

டிசம்பர் மாத குளிரில்
இலையுதிர்த்த மரங்கள் மூளியாய்
கைவிரித்து யாசித்தது கடவுளிடம்.

கருணையுள்ள கடவுள்
பாரபட்சமின்றி வரமளித்தார்
ஒரு வெள்ளை புடவை.

தொலைந்த சாவி

பின்னூட்டமொன்றை இடுக

நான் தனித்திருக்கிறேன்.
பாதையோரமாய் பாதசாரிகளின்
பாதம் பார்த்துக்கொண்டு.
சூரியனின் குரூர பார்வை வேறு.
உடல் லேசாய் தகிக்க ஆரம்பித்தது.
என்னை தொலைத்தவன் தேடி வருவானா
என்ற கேள்வி கனமாய் கணங்களை இம்சித்தது.
வருவான் ! வருவான் !
எனக்காக இல்லாவிட்டாலும்
என்னோடு இணைந்துள்ள
சாமி படத்திற்காகவேனும்.

புலர்ச்சி

பின்னூட்டமொன்றை இடுக

கழிந்த இரவின் குமிழ்ந்த பொழுதுகளில்
என் தனிமை போக்கி ;
அலுப்பில்லாமல் கடகடத்து கொண்டிருக்கிறது
மின்விசிறி

விலகிய இருட்டின் மிச்சமாய்
என் அறையின் ஜன்னலருகே
சுருண்டு கொண்டது
ஒரு கருப்பு பூனை

ஆவி தள்ளி நீர் கலந்து
சொட்டு சொட்டாய்
தயாராகி கொண்டிருக்கிறது
ஒரு கப் காஃபி

இரவில் சுகம் தந்து
மார்பூர்ந்து , உடல் அணைத்தது
உதாசீனமாய் கிடக்கிறது –
படுக்கையில் என் போர்வை.

பொழுது அழகாய் புலர்ந்துக்கொண்டிருக்கிறது !

கீற்று

பின்னூட்டமொன்றை இடுக

நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என வேண்டிய காலம் போய் , நினைத்ததெல்லாம் நடப்பதில் சுவாரசியமில்லையோ என யோசிக்கிறது குரங்கு மனம் .

அழுக்கு தூய்மையிடம்!

2 பின்னூட்டங்கள்

என்னை ஏளனமாய் பார்க்காதே.
நான் நானாக இருப்பதால் தான்
நீ நீயாக இருக்கிறாய்.
நான் உன்னை சேர்ந்தால்
நீ நானாகி விடுவாய்.
நீ என்னை சேர்ந்தாலும்
நீ நானாகி விடுவாய்.
நான் நானாக இருப்பதால் மட்டுமே
நீ நீயாக இருக்கிறாய்.
புரிந்துக்கொள் , தயவுசெய்து.
என்னை ஏளனமாய் பார்க்காதே !

Playing Dice

3 பின்னூட்டங்கள்

He looked happy. A pleasant smile was sitting insistently on his face.He accepted the Hi s and Hello s of the passers by with a slight nod. He was slowly pedaling his bike. His heart was bumping with joy . His life seemed to be in perfect pace and in total control . He sensed joy and happiness all around him and in every small thing – in the flight of the birds , in the setting sun , in the bearded man stroking the guitar to an old country song, in the giggling teens running around the park, in the unspoken love between the couples walking by. All these trifles mattered more today. Beautiful world . Beautiful Life . Blissful Existence.
He kept pedaling.

**************

He walked fast with hands inside his frayed jacket. His bespectacled eyes were in constant search. He was having a fiery conversation with himself. Sometimes words spurted out of his mouth breaking the confines of the mind. The bystanders heard him say “Fucked up” , “Insane” , “God” ,“False”,”Flawed ” etc. He uttered all these words thrice. He felt revulsion at the way men and women live , the way people try to impress each other to look good , better and best , the extent to which they crawl down to seem tall. Image. Bloody Image. All worshipping the flimsy , formless , false apparitions of one another. Total absurdity. Madness to a new high.
“This world is fucked up big time and there is no meaning for Life , whatsoever ” , he thought.

**************

He was driving his new Bugatti , gifted by his dad, in a mad rush. The red-looking devil obeyed him loyally. With little acceleration he sped past hundreds of lesser-looking cars. He didn’t care for the speed limit. He didn’t care to get pulled over by cops. He wanted to enjoy the moment. He was driving one of the costliest car and felt like the King of the world.

**************

He crossed the street with his bike – trusting the signal and the world

**************

He crossed the street -forgetting the signal and the world.

**************

He crossed the street in his car -ignoring the signal and the world.

**************

BANG !!!!!!!!!!!!!!!!

Unbiased dice of Life were thrown ….

The man with the bike died. The man walking survived . The man driving the car lost his memories. The Bugatti was up for resale.

Older Entries