பிளாகில் எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலெழும்போதெல்லாம் ஏதோ ஒன்று தடுத்து கொண்டிருந்தது.இன்று எப்படியும் எழுத ஆரம்பித்துவிடுவது என்ற சங்கல்ப விளைவால் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.இந்த ப்ளாக்கின் தலைப்பில் சொல்வது போல்,இப்பதிவுகள் எல்லாம் ஒரு சில குறிப்புகள் மட்டுமே.என் நினைவின் மிச்சங்கள்.என் சிந்தனையில் கரையேறியவைகள்.என் எண்ணத்தின் நிழல்கள்.வெறும் எழுத தெரிந்தவனாக உள்ள நான் எழுத்தை ஆளுபவனாக மாற ஓடும் ஓட்டத்தில் நின்று மூச்சிரைக்கும் தருணங்கள் இவை.எதை எழுதலாம் ? புனைவுகள் (Fiction) ? அபுனைவுகள் (Non-Fiction )?.To me all non-fictional writings have elements of fiction in them and all fictional writings have its own non-fiction.And I prefer the overlapping space.

என் முயற்சிக்கு தொடக்க கணமாய் ஒரு சிறு கவிதை,

அந்தக்கணம்.

எனக்குள்
என் நினைவுகளை
சரித்தும் , கலைத்தும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அந்தக்கணத்தை.
மகளை கரம் பிடித்து கொடுத்த கணம்,
மகனை வழியனுப்பிவிட்டு
விமானநிலைய வாசலில் வானம் பார்த்த கணம்,
புது வீட்டில் கைகோர்த்து அவளோடு நுழைந்த கணம்,
நண்பனை பிணக்கிடங்கில் பார்த்த கணம்,
இப்படி மறக்க முடியாதவைகள்,
மறக்க நினைப்பவைகள்
முந்தியடித்துக்கொண்டு முன்வர,
கடைசியில் இதற்கெல்லாவற்றிற்கும் அடியில்
இன்னும் உயிர்பசையோடு
லேசான கதகதப்பாய் கிடைத்தது-
“அம்மாவின் முத்தம்”.
இந்தக்கணம்…….

என் வனத்தில் முதல் மழை.

Advertisements