பகல் இரவு பின்னும்
இரகசியத்தை அறிய
முயன்று கொண்டிருக்கிறது.
எதிர்பாராமல் முந்தி வந்து,
எதிர்பார்த்த போது பிந்தி வந்து,
மேகங்களால் தன்னை மறைத்துக் கொண்டு,
சில சமயங்களில் பொய் இரவை உருவாக்கி.
அத்தனையும் வியர்த்தனம்.

பாவம் பகலுக்கு தெரியாது
இரவு ரகசியத்தை
மனிதமனதுள் மறைத்துவிட்டதை.

சூரியன்கள்
ஊடுருவ முடியாத கும்மிருட்டில்
உறையும் இரகசியங்கள்
நம்முள்.

Advertisements