என்னை ஏளனமாய் பார்க்காதே.
நான் நானாக இருப்பதால் தான்
நீ நீயாக இருக்கிறாய்.
நான் உன்னை சேர்ந்தால்
நீ நானாகி விடுவாய்.
நீ என்னை சேர்ந்தாலும்
நீ நானாகி விடுவாய்.
நான் நானாக இருப்பதால் மட்டுமே
நீ நீயாக இருக்கிறாய்.
புரிந்துக்கொள் , தயவுசெய்து.
என்னை ஏளனமாய் பார்க்காதே !

Advertisements