நான் தனித்திருக்கிறேன்.
பாதையோரமாய் பாதசாரிகளின்
பாதம் பார்த்துக்கொண்டு.
சூரியனின் குரூர பார்வை வேறு.
உடல் லேசாய் தகிக்க ஆரம்பித்தது.
என்னை தொலைத்தவன் தேடி வருவானா
என்ற கேள்வி கனமாய் கணங்களை இம்சித்தது.
வருவான் ! வருவான் !
எனக்காக இல்லாவிட்டாலும்
என்னோடு இணைந்துள்ள
சாமி படத்திற்காகவேனும்.

Advertisements