கழிந்த இரவின் குமிழ்ந்த பொழுதுகளில்
என் தனிமை போக்கி ;
அலுப்பில்லாமல் கடகடத்து கொண்டிருக்கிறது
மின்விசிறி

விலகிய இருட்டின் மிச்சமாய்
என் அறையின் ஜன்னலருகே
சுருண்டு கொண்டது
ஒரு கருப்பு பூனை

ஆவி தள்ளி நீர் கலந்து
சொட்டு சொட்டாய்
தயாராகி கொண்டிருக்கிறது
ஒரு கப் காஃபி

இரவில் சுகம் தந்து
மார்பூர்ந்து , உடல் அணைத்தது
உதாசீனமாய் கிடக்கிறது –
படுக்கையில் என் போர்வை.

பொழுது அழகாய் புலர்ந்துக்கொண்டிருக்கிறது !

Advertisements