மனம் விட்டு மனம் தாவும்
அந்திப் பொழுதில்
அரையிருட்டு அறை கொடுக்கும்
ஏகாந்தத்தில்
கவிதை கசியும் மனதின்
ஓயாத சத்தத்தோடு
மழையடிக்கும் கண்ணாடி ஜன்னல்களை
பார்ப்பது சுகம்.

*****

என் மனம் விளிக்கும் அறைகூவல்களை
எல்லாம் கேட்டுக்கொண்டு
விஷ்ராந்தியாய் இருக்க சொல்கிறது
இன்னொரு மனம்.
இதில் எது என் மனம் ?
விளிப்பதா ?
அதை கேட்பதா ?
அது விளிப்பதையும் கேட்பதையும் உணர்வதா?
இல்லை இது எல்லாவற்றையும் எழுதுவதா ?

Advertisements