செல்வராகவன் என்னை பொறுத்தவரை வக்கிரங்களின் கதை சொல்லி. அவருடைய பெரும்பாலான கதையில் எதாவது ஒரு vice தான் மையமாக இயங்கும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களில் காமம் , புதுப்பேட்டையில் சுய நலமான survival instinct. சரி , ஆயிரத்தில் ஒருவன் ஒரு adventure cum fantasy film என்றதும் தன்னுடைய வழக்கமான பாணியில் இருந்து வேறுபட நினைக்கிறார் போல என்று பார்த்தால் அக்மார்க் செல்வராகவத்தனத்துடன் உருவாக்கியிருக்கிறார் . இந்த படத்தின் vice – பகை/துவேஷம்.

கதை ஒரு wild wild imagination.நிலவு தெரியும் தாமரை தடாகம் , தூது போகும் புறாக்கள் ,காதலனும் காதலியும் சந்திக்கும் நந்தவனம் , புழுதி பறக்க ஒடும் வெண்புரவிகள் ,வாட்போர் , உயர்ந்து நிற்கும் மாட மாளிகைகள் என சோழர்களை குறித்து ஏற்கனெவே நமக்குள் வரையப்பட்டிருந்த historically romantic சித்திரத்தை துவம்சம் செய்யும் கதைக்களம். தமிழ் மொழியின் சிறந்த செவ்விலக்கியங்கள் தோன்றியது சோழர் காலத்தில். சமூகம் , பொருளாதாரம் , கலாச்சாரம் , அரசியல் , இலக்கியம் என்று எல்லா துறையிலும் refined நிலையில் இருந்த சோழர்களை ஒரு அத்துவான தீவில் , பாழான பாலை நிலத்தின் குகைக்குள்ளே தள்ளி விட்டிருக்கிறது இக்கதை. இப்படி ஒரு கதையை தைரியமாய் யோசித்ததுக்கு செல்வாவிற்கு ஒரு கைக்குலுக்கல்.

1279 ல் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் நடந்த கடைசி யுத்தத்தில், பாண்டியர்களிடமிருந்து தப்பித்த சோழ இளவரசனை கண்டுபிடிக்க செல்கிறது ஒரு அகழ்வாராய்ச்சி கும்பல். ரீமா சென் தான் தலைவி. பகையை மறக்காத பாண்டியர்கள் பரம்பரை பரம்பரையாக அந்த சோழ இளவரசனையும் அவனோடு எடுத்து செல்லப்பட்ட அவர்களின் குலதெய்வ சிலையையும் தேடுகிறார்கள். அதற்காக அரசாங்கத்தின் அதிகார அடுக்குகளில் ஊடுருவுகிறார்கள் (Dan Brown தன conspiracy sub-plot). அவர்கள் சோழர்கள் வாழும் இடத்தை கண்டுபிடிப்பது முதல் பாதி. கண்டுபிடித்த சோழர்களை மிச்சமில்லாமல் கொன்று குவிப்பது அடுத்த பாதி. இதை ஒரு genocide படம் என்று தான் கொள்ள வேண்டும்.இதற்கும் ஈழ தமிழர் படுகொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று படைப்பாளியே சொன்ன பிறகு விமர்சகர்கள் முடிச்சுகளை அவிழ்த்துவிடலாம்.

படத்தில் சில காட்சிகளை அடடே என்று சிலாகிக்கவும் , சில காட்சிகளை பரவால்ல என்று ஏற்றுக்கொள்ளவும் , சிலவற்றை மோசம் என்று நிராகரிக்கவும் முடிகிறது.
சாம்பிளுக்கு முறையே :
1. பார்த்திபன் Intro ,
2. Gladiator வகை தமிழ் வீர விளையாட்டு ( தேவையில்லாத ஒரு காட்சி)
3. ரத்தம் உறிஞ்சும் ஜலப்பிராணி

படத்தில் சோழர்கள் பேசும் தமிழ் -அமுதம். எவ்வளவு வார்த்தைகள் ! தள்ளை , வர்த்தமானம் , சுவானம் ,மதலை , விரிச்சி , அடைவு ,சௌசம் etc. “ஆயிரம் ஆண்டுகள் எதற்காக கருதியிருந்தீர்களோ ?” என்ற வாக்கியத்தில் கருதி என்ற வார்த்தையின் அர்த்தப்பிரயோகம் எனக்கு புதிது.இதற்கு முன்னால் எந்த தமிழ் படத்திலேயும் தமிழ் பேச இவ்வளவு மெனக்கெட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.சில காட்சிகளில் நிறைய கற்பனை கலந்த ஆராய்ச்சி வெளிப்பட்டது : நல்லது கெட்டது என்று எல்லாவற்றிர்க்கும் கொடுக்கப்படும் நரப்பலி , கோவில் பூசையில் திரு நங்கையர் நடனம் , அரசனோடு கலவி செய்யும் பெண்ணை தயாரிக்கும் முறை , யாழ் இசை , தெலுங்கு பாட்டு , தாந்த்ரீக செயல்பாடுகள் , விரிச்சி கேட்டல் , அரசனின் பாலியல் பகடி.

படத்தில் மருந்துக் கூட நல்லத்தனமே இல்லை. Even Karthi taking guard of the Chola prince in the end , did not look like a redemptive act but only as an act to perpetuate the ongoing orgy of vengeance. நான் இதை குறையாக சொல்லவில்லை 🙂

நீளம் , இறுக்கம் இல்லா திரைக்கதை , லாஜிக் ஒட்டைகள் , கோரமான காட்சிகள் என்று படத்தில் குறை சொல்வதற்கு நிறைய இருந்தாலும் பிடித்தவர்கள் ஏன் பிடித்திருக்கிறதென்றும் , பிடிக்காதவர்கள் ஏன் பிடிக்கவில்லையென்றும் யோசிக்க வேண்டிய படம்.

Advertisements