இது 1951 J D Salinger எழுதிய “The Catcher in the rye” என்ற நாவலின் முதல் இரண்டு பாராவின் தமிழாக்கம்(என் முதல் மொழியாக்க முயற்சி).நாவலின் இருனூறு பக்கங்களிலும் ஆரம்பத்திலிருந்த அதே பகடியை மெயின்டெய்ன் பண்ணியிருப்பார். A satirist to the core.ங்களுக்கு நிஜமாவே நான் சொல்றதை கேட்க ஆசை இருந்தா , நீங்க எதை முதல்ல தெரிஞ்சுக்க நினைப்பீங்க, நான் எங்க பொறந்தேன் , என் கேவலமான சின்ன வயசு வாழ்க்கை எப்படி இருந்தது , என்னை பெத்தவங்க என்ன பெறதுக்கு முன்னாடி பின்னாடி என்ன பண்ணினாங்கன்ற மாதிரி ஒண்ணுத்துக்கும் பிரயோஜனப்படாத கேள்விங்களாய் நிறைய இருக்கும் . உங்களுக்கு உண்மைய தெரிஞ்சுக்கணும்னா, எனக்கு இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல இஷ்டம் இல்ல.முதல்ல இந்த சமாச்சாரமெல்லாம் சுத்த போர். இரண்டாவது என்ன பெத்தவங்கள பத்தி நான் எதாவது அந்தரங்கமான விஷயத்த உடைச்சிட்டேனா , பாவம் , ரெண்டு பேரும் ரத்த வாந்தியே எடுத்திடுவாங்க. இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் அவங்க ரொம்ப கடுப்பாவாங்க, முக்கியமா எங்க அப்பா. நல்லவங்கதான் – நான் இல்லன்னு சொல்லல – ஆனா சிடுமூஞ்சிங்க. அது மட்டுமில்லாம நான் ஒண்ணும் உங்களுக்கு என் முழு வாழ்க்கை வரலாறை புட்டு புட்டு வைக்க போறதில்லை.நான் ஒடுங்கி போய் இங்க வந்து சேர்றதுக்கு முன்னாடி , போன கிறிஸ்துமஸ் அப்ப எனக்கு ஒரு பைத்தியக்கார மனுஷன் கூட நடந்த அனுபவத்தை மட்டும் தான் சொல்ல போறேன். அவ்வளவுதான் நான் DB கிட்டயும் சொன்னேன் ; என் அண்ணங்காரன்.ஹாலிவுட்ல இருக்கான்.நான் இருக்கிற இந்த அத்துவான இடத்துல இருந்து கொஞ்ச தூரம்தான் , என்னை எப்படியாவது ஒவ்வொரு வாரக்கடைசியும் பார்க்க வந்திடுவான்.அனேகமா , அடுத்த மாசம் அவன் கார்ல என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போவான்னு நினைக்கிறேன்.இப்பத்தான் ஒரு ஜாகுவார் வாங்கினான்.ஒரு மணி நேரத்துக்கு இரு-நூறு மைல் சுத்தக்கூடிய வேலை. அந்த காருக்கு அவனுக்கு நாலாயிரம் டாலர் ஆச்சு. இப்ப , நல்ல செழிப்பா இருக்கான். முதல்லலாம் இப்படி இல்ல. எங்க வீட்ல எங்ககூட இருக்கும் போது ஒரு சாதாரண எழுத்தாளனாத்தான் இருந்தான். அவன் ஒரு செம புக் எழுதினான் , சிறுகதை தொகுப்பு ,நீங்க கேள்விபடலேன்னா அந்த புத்தகம் பேரு “ரகசிய தங்கமீன்”. அதுல எனக்கு ரொம்ப பிடிச்ச கதை “ரகசிய தங்கமீன்” தான். அது , தான் வச்சிருக்கிற மீனை யாரையும் பார்க்க அனுமதிக்காத ஒரு சின்ன பையனை பத்தின கதை. ஏன்னா அந்த மீனை அவன் சொந்த காசுல வாங்கியிருப்பான் .கொன்னுட்டான் அந்த கதையில .இப்ப DB ஹாலிவுட்ல இருக்கான் , வேசியா. நான் ஒண்ணை ரொம்ப வெறுக்கிறேன்னா அது சினிமா தான். அதை பத்தி தப்பித் தவறிக் கூட சொல்லிடாதீங்க.

நான் கதையை எங்கிருந்து ஆரம்பிக்க நினைக்கிறேன்னா , என்னைக்கு நான் பிரின்ஸி பிரப்பை விட்டு வெளியே வந்தேனோ அன்னையில இருந்து. பிரின்ஸி பிரப் – அகெர்ஸ்டௌன் , பென்சில்வேனியால்ல உள்ள ஒரு ஸ்கூல்.நீங்க கேள்வி பட்டிருப்பீங்க. இல்லைன்னா விளம்பரத்தையாவது பார்த்திருப்பீங்க. ஒரு ஆயிரம் பத்திரிக்கையில விளம்பரம் கொடுப்பாங்க. எப்பவும் வாட்ட சாட்டமா ஒரு பையன் குதிரை மேல வேலியை தாண்டுற மாதிரி ஸ்டில் இருக்கும்.என்னமோ பிரின்ஸில இருக்கிற எல்லாரும் எப்பவும் போலோ விளையாடுற மாதிரி. நானும் இந்த ஸ்கூலுக்கு வந்த போது அக்கம் பக்கதுல ஒரு குதிரையை கூட பார்க்கலை.அப்புறம் அந்த குதிரை மேல இருக்கிற பையனுக்கு கீழே “1888 ஆம் ஆண்டிலிருந்து கம்பீரமும் , நேர் கொண்ட பார்வையும் உடைய ஆண்மகன் களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் ” என்று சொல்லியிருக்கும். பட்சிகளுக்காக மட்டும். மத்த ஸ்கூல்ல செய்யறதை விட , இவங்க ஒண்ணும் பசங்களை உருவாக்க எதையும் பெருசா செஞ்சு கிழிச்சிடலை.நான் அங்க கம்பீரம் நேர்கொண்ட பார்வை மாதிரியான சமாச்சாரத்தோடு யாரையும் பார்க்கலை.வேணும்மின்னா ரெண்டு பேரை சொல்லலாம்.அதுவே அதிகம். அவங்க கூட பிரின்ஸிக்கு வந்து அப்படி ஆகல , அப்படியேத்தான் வந்தாங்க…..Original Version

IF YOU REALLY WANT TO HEAR about it, the first thing you’ll probably want to know is where I was born, and what my lousy childhood was like, and how my parents were occupied and all before they had me, and all that David Copperfield kind of crap, but I don’t feel like going into it, if you want to know the truth. In the first place, that stuff bores me, and in the second place, my parents would have about two hemorrhages apiece if I told anything pretty personal about them. They’re quite touchy about anything like that, especially my father. They’re nice and allóI’m not saying that-but they’re also touchy as hell. Besides, I’m not going to tell you my whole goddam autobiography or anything. I’ll just tell you about this madman stuff that happened to me around last Christmas just before I got pretty run-down and had to come out here and take it easy. I mean that’s all I told D.B. about, and he’s my brother and all. He’s in Hollywood. That isn’t too far from this crumby place, and he comes over and visits me practically every week end. He’s going to drive me home when I go home next month maybe. He just got a Jaguar. One of those lithe English jobs that can do around two hundred miles an hour. It cost him damn near four thousand bucks. He’s got a lot of dough, now. He didn’t use to. He used to be just a regular writer, when he was home. He wrote this terrific book of short stories, The Secret Goldfish, in case you never heard of him. The best one in it was “The Secret Goldfish.” It was about this little kid that wouldn’t let anybody look at his goldfish because he’d bought it with his own money. It killed me. Now he’s out in Hollywood, D.B., being a prostitute. If there’s one thing I hate, it’s the movies. Don’t even mention them to me.

Where I want to start telling is the day I left Pencey Prep. Pencey Prep is this school that’s in Agerstown, Pennsylvania. You probably heard of it. You’ve probably seen the ads, anyway. They advertise in about a thousand magazines, always showing some hot-shot guy on a horse jumping over a fence. Like as if all you ever did at Pencey was play polo all the time. I never even once saw a horse anywhere near the place. And underneath the guy on the horse’s picture, it always says: “Since 1888 we have been molding boys into splendid, clear-thinking young men.” Strictly for the birds. They don’t do any damn more molding at Pencey than they do at any other school. And I didn’t know anybody there that was splendid and clear-thinking and all. Maybe two guys. If that many. And they probably came to Pencey that way.

Advertisements